ஜூலை 19, சென்னை (Health Tips): சுண்டல் என்று கூறினாலே பலரும் கருப்பு சுண்டலை கூறுவார்கள். இதனை உப்பு சேர்த்து வேகவைத்து, வெங்காயம் இட்டு தாளித்து சாப்பிடலாம். அதேபோல,தென் மாவட்டங்களில் பரவலாக புளிக்குழம்பு வகையில் கொண்டைக்கடலை குழம்பு செய்து பரிமாறப்படும்.
கொண்டைக்கடலையில் இருக்கும் போலிக் அமிலம் மாரடைப்பை காரணியாக கொண்டுள்ள இதய நோயை தடுக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், ஆன்டி-ஆக்சிடென்ட் தன்மையை கொண்டது ஆகும்.
வெள்ளை கொண்டை கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகமாகவே இருக்கின்றன. இவை சர்க்கரையை வெளியிடும் பண்பும் குறைவாக கொண்டவையாகும். இதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை கட்டாயம் சாப்பிடலாம். Heart of Dog: தற்கொலை செய்த உரிமையாளர் வருவார் என வெகுளியாய் காத்திருக்கும் நாய்; கண்கலங்க வைக்கும் சம்பவம்.!
அதேபோல இரும்புச்சத்து நிறைந்தது. இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை போன்ற பிரச்சனையும் தடுக்க உதவுகிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்து, சோடியம், துத்தநாகம், மாக்னீசு, தாமிரம் போன்றவை நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
இதனை அளவோடு உண்டால் வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைக்கும் தீர்வாக அமையும். சிறுநீர் பெருக்கியாக இருக்கும் கொண்டைக்கடலை, சிறுநீர் அடைப்பை ஏற்படுத்தும் காரணிகளை குறைக்க உதவுகிறது. கருப்பு கொண்டை கடலை காமத்தை பெருக்கும் தன்மை கொண்டதாகும்.