அக்டோபர் 28, ஓசூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் (Hosur) பாகலூர் சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில், ஓசூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். Transport Department: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை.!
அப்போது, ஒரு ஆசிரியையின் கைக் கடிகாரத்தை (Wrist Watch) அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் எடுத்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் கோபமடைந்த ஆசிரியை, அந்த மாணவியையும் அவரது உடற்பயிற்சி ஆசிரியரையும் (PET) தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். மேலும், இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மாணவி கீழே கிடந்த கைக்கடிகாரத்தை எடுத்து அந்த ஆசிரியையிடம் கொடுத்துள்ளார். ஆனாலும், அந்த ஆசிரியை சமாதானம் ஆகாமல் கை கடிகாரத்தை மாணவி திருடியதாகக் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அந்த உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளி வளாகத்தில் வெளியே அந்த மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இது, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவி மீது உடற்கல்வி ஆசிரியர் தாக்குதல்:
ஓசூர் பள்ளி மாணவி மீது குற்றம் இருந்தாலும் கூட அவருடைய பெற்றோர்களை வரவழைத்து விசாரித்து இருக்க வேண்டுமே ஒழிய, விளையாட்டு
பயிற்சி ஆசிரியர் நடுரோட்டில், சக மாணவர்கள் முன்னிலையில்
அந்த மாணவியை தாக்கி, இப்படி நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் pic.twitter.com/P6hNYckCF8
— Karu.Nagarajan (மோடியின் குடும்பம்) (@KaruNagarajan) October 28, 2024