Child Shalmalee | Prime Minister Narendra Modi (Photo Credit: Twitter / Facebook)

ஏப்ரல் 25, (Trending Video): சமூக வலைத்தளங்களில் எப்போதும் பல்வேறு வீடியோக்கள் வலம்வரும். இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் சிறுமி ஒருவர் பல்லவகால பல்லவியாழி என்ற கன்னட பாடலை பெண்மணி ஒருவர் பாட, பின்னணியில் அவர் இசையிசைத்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.

அந்த வீடியோவில் இசையமைத்த சிறுமி பெண்ணின் பின்னணி குரலுக்கு ஏற்ப தானும் இசையை பாடி மகிழ்ந்தார். அவரின் பாடலில் உள்ள மர்மம் அதனை கேட்டோரை மொழிகளை கடந்து பூரிக்க வைத்தது. இந்த விடியோவை பகிர்ந்த நபருக்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிறுமியின் பாடலுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். DC Vs SRH: பந்துவீச்சில் சிதறவிட்ட ஹைதராபாத் அணி.. 145 ரன்களில் சுருண்டது டெல்லி கேபிட்டல்ஸ்.!

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிறுமியின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி ஒவ்வொருவரின் முகத்திலும் தென்படுகிறது. சிறுமியின் திறமை அசாத்தியமானது, அது பூரிக்க வைக்கிறது. எனது அன்பான வாழ்த்துக்கள் சால்மலி" என கூறியுள்ளார். இதன் வாயிலாக சிறுமியின் பெயர் சால்மலி என்பது உறுதியாகியது. இந்த பாடலை கன்னட கவிஞர் கே.எஸ் நரசிம்ம சுவாமி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.