Work From Home | Couple Enjoy (Photo Credit: Pixabay)

ஜூன் 17, அமெரிக்கா (World News): உலகம் எதை நோக்கி நகர்ந்து வருகிறது என்று கேட்டால், அவரவர் சிந்தைக்கு தோன்றுவதை தங்களின் கருத்துக்களாக முன்வைப்பார்கள். ஆனால், உடலுறவு என்ற விசயத்திற்கு யாரும் எவ்வித சமரசமும் செய்துகொள்வதில்லை. தங்களின் மனைவியுடன், காதலியுடன், தன் மீது அன்பு வைத்துள்ள ஒருவருடன் என ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவருடன் உல்லாசமாக இருக்கின்றனர். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பமாக கருதப்படுகிறது.

மேலை நாடுகளை பொறுத்தமட்டில் அவரவர் நாட்டு சட்டப்படி அனைத்தும் கைகூடும். மேலை நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சி என்பது இந்தியாவை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 10 முதல் 20 ஆண்டுகள் பின்தங்கியது தான். சில துறைகளில் ஆண்டுகள் தசாப்தம் அளவும் வித்தியாசப்படும். இந்த நிலையில், அமெரிக்காவில் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றுவோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது, வீட்டில் இருந்து பணியாற்றும் வேலையாட்களில் 7ல் ஒருவர் பணிநேரத்தில் தங்களின் துணையோடு உடலுறவு மேற்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 40% நபர்கள் அலுவலகத்தில் பணிநேரத்தின் போது சுய இன்பத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தவிர்த்து வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அதிக நேரம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இணையத்தில் பல விஷயங்களை தேடியதும் உறுதியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் மேற்கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு அலுவலக பணியாளர்கள் 39% நபர்கள் சுய இன்பம் மேற்கொண்டதும், 2012ல் இது 31% என்ற பெயரில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி சுய இன்பம் என்பது அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், அவற்றை பணியிடத்தில் தொடருவது அவரவரின் சூழ்நிலையை பொறுத்தது என கூறுகிறார்கள்.