மார்ச் 15, புதுடெல்லி (New Delhi): கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றியடைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2019ல் குடியுரிமை சட்டதிருத்தத்தை (Citizen Amendment Act CAA) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இச்சட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 11, 2024 அன்று இந்தியாவில் சட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்தை முன்வைத்து எதிர்ப்பும் தெரிவித்து வந்தபோதிலும், அரசு தெளிவாக சட்டத்தில் இருந்து பின்வாங்க இயலாது என அறிவித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் குடியுரிமை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என கூறிவிட்டார். Entire 140 cr Indians are Hindu: "140 கோடி இந்தியர்களும் இந்துக்களே" - ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா பேச்சு.!
சிஏஏ-க்கு எதிரான வழக்கு (Supreme Court of India) விசாரணைக்கு சம்மதம்: குடியுரிமை திருத்தச்சட்டத்தின் வாயிலாக பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலை சந்தித்து, அங்கு வாழ வழியின்றி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் வரை இந்தியாவிற்கு வருகைதந்த இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பவுத்த சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. பிற மதத்தினருக்கு இதன் வாயிலாக இந்திய குடியுரிமை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு தடை விதிக்க வேண்டி பதிவு செய்யப்பட்டுள்ள அச்சட்டத்திற்கு எதிரான வழக்குகளை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், மார்ச் 19ம் தேதி வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்து இருக்கிறது.