Tamilnadu Rains (Photo Credit : @PTI_News X)

செப்டம்பர் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், மிக லேசான மழை புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் பதிவாகியுள்ளது. நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில், வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுகுறையக்கூடும்.

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Canara Bank Job: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.! 

சென்னை வானிலை (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.