Visual from Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 22, ஹைதராபாத் (Trending Video): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஜகத்கிரி குட்டா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் - மனைவி பிரச்சனை நடந்துள்ளது.

அப்போது, மனைவி ஆத்திரமடைந்து தான் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கோபித்துக்கொண்டு, பள்ளியில் படிக்கச்சென்ற மகளை மீண்டும் அழைத்துவர ஆவேசமாக புறப்பட்டுள்ளார். இது கணவருக்கு உச்சகட்ட ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. China Taiwan Issue: “தைவான் நாடும் இல்லை, இன்னும் நாடாகாது” – மீண்டும் பற்றியெரியும் தைவான் விவகாரம்; சீனாவின் விடாப்பிடி.!

மனைவியிடம் சண்டையிட்டவாறு வீதிக்கு வந்தவர், வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த 9 வயது சிறுவன் ஆதிக் என்பவரை கடுமையாக தாக்கினார். பின், சிறுவனின் கழுத்து, முகம் உட்பட இடங்களில் பிளேடால் அறுத்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டனர். மக்கள் கூடியதால் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.