Tamilnadu Rains (Photo Credit : @TamilTheHindu X)

நவம்பர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 24ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரூ இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.