ஜூலை 17, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் மர்ம உயிரினம் ஒன்று நடமாடி வருவதாக தகவல் ஒன்று மிகப்பெரிய அளவில் வைரலாகியது. மர்ம உயிரினம் குறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானதால் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகினர்.
ஆட்டுத்தலையுடன் மர்ம விலங்கு :
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் கீழ்வலசை கிராமத்தில் மக்களை விலங்கு ஒன்று தாக்கியதாகவும், அது 4 விரல்கள் கொண்ட ஆட்டின் தலையுடன் இருப்பதாகவும் அந்த செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. Chennai News: 8 மாத குழந்தை மூக்கில் தைலம், கற்பூரம் சேர்த்து தேய்த்த தாய்.. துடிதுடித்து பறிபோன உயிர்.!
தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் :
அதன்படி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த விதமான மர்ம உயிரினமும் இல்லை. இது முற்றிலும் வதந்தி. இது தொடர்பான புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக ஏற்படுத்தப்பட்ட படம் தற்போது வைரலாகி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.