ஜூன் 11, மும்பை (Maharashtra News): பாலியல் இன்பங்களில் ஈடுபடும் தம்பதிகளும், காதல் ஜோடிகளும் கர்ப்பம் போன்ற விவகாரங்களை தவிர்க்க கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது வழக்கம். கருத்தடை சாதனங்களில் காண்டம் எனப்படும் ஆணுறை, காப்பர் டி, உட்பட பல்வேறு சாதனங்கள் இருக்கின்றன. இந்நிலையில், மும்பையில் சமீபகாலமாக கருக்கலைப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கர்ப்பம் தவிர்க்கும் முயற்சிகள் தோல்வி:
30 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே கருக்கலைப்பு அதிகரித்துள்ளது என்றும் தகவல் அறியும் ஆர்வலரின் முயற்சியால் பெறப்பட்ட தகவலில் அதிர்ச்சி திருப்பமாக இப்பதில்கள் கிடைத்துள்ளன. மேலும், கருத்தடை சாதனங்கள் என்பது கர்ப்பத்தை தவிர்க்கும் முயற்சியில் தோல்வி அடைவதால், கர்ப்பங்களின் விகிதம் என்பது அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 67,636 கருக்கலைப்புகள் நடந்துள்ளன.
3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் கருக்கலைப்பு:
பாதுகாப்பு இல்லாத உடலுறவு, கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தாமல் இருத்தல், எதிர்பாராத உடலுறவு அதனால் கர்ப்பம், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, கள்ளக்காதல் உடலுறவால் கர்ப்பம் என கர்ப்பத்திற்கான காரணங்கள் எண்ணிலடங்காமல் தொடருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளின்படி, மும்பையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 78,199 பேர் கருக்கலைப்பு செய்துள்ள நிலையில், இவர்களில் 67,636 பேர் 30 முதல் 34 வயது வரை உள்ளவர்கள் ஆவார்கள்.
கருக்கலைப்பு விபரங்கள்:
இவர்கள் உடலுறவின்போது பயன்படுத்திய கருத்தடை சாதனங்கள் அனைத்தும் பயனற்று போன காரணத்தால், கருக்கலைப்புகள் செய்யும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 2023-24 ஆம் ஆண்டில் 25,835 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர். இவர்களில் 7,606 பேர் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள், 4,802 பேர் 35 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள், 3,669 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
கிழிந்துபோகும் ஆணுறைகள்:
இந்த விஷயம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இன்றளவில் இளஞர்கள் பலரும் பாதுகாப்பு கொண்ட உடலுறவை தவிர்த்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே அதனை விரும்புகின்றனர். இதனால் ஊசி, ஆணுறை, காப்பர்-டி சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். உடலுறவின்போது ஆணுறைகள் கிழிந்துபோன நிகழ்வுகளும் இருக்கின்றன. இதனால் கர்ப்பம் உருவாகி, பின்னாளில் கருக்கலைப்பு செய்யப்படுகின்றன என கூறுகின்றனர்.