UP Prayagraj Teen Murder Case (Photo Credit : @brinksreportcom / @VoiceOFdePriVED X

ஆகஸ்ட் 29, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் காமினி. இவரது மகன் பியூஷ் (வயது 17). சிறுவன் அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அதனால் பதறிப் போன பியூஷின் தாய் காமினி தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கூகுள் மேப்பால் பறிபோன 4 உயிர்.. ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.! 

சிறுவன் தலை துண்டித்து கொலை :

இதனிடையே சிறுவனின் உடல் அங்குள்ள ஓடை ஒன்றில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல் மற்றும் தலை என தனிதனியாக இருந்த பாகங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து சோதனையில் அது மாணவர் பியூஷ் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை மர்மநபர் துணியால் சுற்றி ஓடையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விசாரணையில் சரண்சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடந்த விசாரணையில் அவர் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், சரண் சிங்கின் தம்பியின் பேரன் தான் பியூஷ் என்பது தெரியவந்துள்ளது.

தாத்தாவின் அதிரவைக்கும் வாக்குமூலம் :

இது குறித்து அவர் அளித்த வாக்குமூலம் அதிரவைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. அவர் கூறியதாவது, "கடந்த 2023 - ஆம் ஆண்டு எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். அடுத்த ஆண்டில் எனது மகளும் தற்கொலை செய்தார். எனது குடும்பத்துக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக சந்தேகித்து உள்ளூரில் உள்ள மந்திரவாதியை சந்தித்தபோது அவரும் இதனை கூறினார். மேலும் தம்பியின் பெயரால் இந்த நிகழ்வுகள் நடப்பதாகவும், அவரை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஆலோசனையின் பெயரில் நரபலி கொடுக்க முடிவு செய்து சிறுவனை கடத்தி தலையை துண்டித்து கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சரண் சிங்கை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.