Dog (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 09, சித்தார்த் நகர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்டம், பார்கத்வா கிராமத்தில் வசித்து வரும் நபர் அபித் அலி. இவரின் மகள் தரன் (வயது 10). சிறுமி அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது பிற சகோதர-சகோதரிகளுடன் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார்.

12 இடங்களில் கடித்துகுதறி சோகம்: அச்சமயம், அங்கு வந்த தெருநாய்கள், திடீரென மூர்க்கமாகி சிறுமி தரனை (Dogs Bit the Girl) கடுமையாக தாக்கி இருக்கிறது. சிறுமியின் தலை, கை-கால் என உடல் முழுவதும் 12க்கும் அதிகமான இடத்தில் கடித்து குதறியது. சிறுமி மற்றும் அவரது உடன்பிறப்புகளின் சத்தம் கேட்டு வந்த அக்கம்-பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்து சிறுமியை மீட்டனர்.

மரணத்தை உறுதி செய்த மருத்துவர்கள்: உடனடியாக சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Maharashtra Shocker: அரசியல்கட்சி பிரமுகர் நேரலையின்போதே சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! பதற்றமான சூழல்.. மஹாராஷ்டிராவில் பேரதிர்ச்சி..!

Death File Pic (Photo Credit: Pixabay)

நீதிபதியையும் விட்டுவைக்காத தெருநாய்கள்: சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுமியின் பெற்றோரிடம் புகார் அளிக்க கேட்டுக்கொண்டபோது, அவர்கள் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி ஜெயப்ரகாஷ் நடைபயணம் சென்றபோது தெருநாய்களால் துரத்தி காயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் நாய்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களே கவனம்: பச்சிளம் குழந்தைகளை ஆடு, மாடு மேய்க்க பெற்றோர் அழைத்து செல்வது கிராமங்களில் இயல்பானது எனினும், அவர்களுடன் பெரியவர்களையும் அனுப்பி வைக்க வேண்டும். ஏனெனில் கால்நடைகளை தாக்க நினைக்கும் நாய்கள், திடீரென மனிதர்களையும் இரையாக எண்ணி தாக்குதல் நடத்தக்கூடும்.