ஜூலை 25, கொச்சி (Kerala News): சாலையின் நடுவே எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் நீளமான வெள்ளை கோடு போடப்பட்டிருந்தால் அந்த சாலையில் வேகமாக செல்லக்கூடாது. அதேபோல அந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது என்று அர்த்தம். இந்த கோடுகள் போக்குவரத்தை சீராகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது. ஆனால் அதனை மீறி இளைஞர் ஒருவர் வாகனத்தை முந்த முயற்சித்து, மற்றொரு வாகனத்தால் இடிபட்டு அவரது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவின் மூலம் இச்சம்பவமானது கேரளாவில் நடந்தது தெரிகிறது. Driver Dies By Heart Attack: தன் உயிர் போகும் முன், 20 பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்..!
Solid white line for a reason pic.twitter.com/Q7hqE9CqUC
— SafetyFirst (@SafetyOverSpeed) July 25, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)