நவம்பர் 11, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் இன்று சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி பயங்கர விபத்தில் சிக்கியது. சாலையில் லாரி சென்ற போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்த நிலையில், அதன் மீது லாரி மோதாமல் இருக்க ஓட்டுநர் அதிர்ச்சியில் வாகனத்தை திருப்பியதால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்ட நிலையில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் விழுந்து தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. இதில் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து சிதறி தேசிய நெடுஞ்சாலையே போர்க்களமான நிலையில், இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஓரம் என்பதால் வீடுகளும் அருகில் இல்லை. ஒரு சில தனிவீட்டு கட்டிடங்கள் மட்டுமே இருந்ததால் அதன் மீது சிலிண்டர் விடாத காரணத்தால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
சிலிண்டர் வெடித்து சிதறும் அதிர்ச்சி காட்சிகள்:
அரியலூர் அருகே சிலிண்டர் லாரியில் தீ விபத்து
சிலிண்டர்கள் லாரியில் வெடித்து சிதறியதின் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது,லாரி முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது லாரி ஓட்டுனரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. #அரியலூர் #lorryfire pic.twitter.com/bjuDWnKDOE
— Srini Subramaniyam (@Srinietv2) November 11, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)