மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன. உக்ரைன் - ரஷியா போரினை அடிப்படையாக கொண்டு உருவாகிய 20 டேஸ் இன் மரியுபோல் என்ற குறும்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் (Oppenheimer) திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதை அவரின் மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் பெற்றார்.

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)