டிசம்பர் 07, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) சீசன் 8, 62 வது நாளில் இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டி தொடர்ந்து தொடர்ந்து விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு, இந்த வாரம் ஏஞ்சல்-டெவில் எனப்படும் போட்டி கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில், போட்டியின் சுவாரஸ்யத்துக்காக பல சர்ச்சைகள் நடந்த நிலையில், ஜாக்குலின் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து, அதனை குறைக்கும் வகையில் செயல்பட்டு இருந்தனர். இந்த விஷயம் விவாதத்தை உருவாக்கி இருந்த நிலையில், அவர்கள் டாஸ்கில் சரிவர கலந்துகொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் விஜய் சேதுபதி அதுதொடர்பாக சனிக்கிழமையான இன்று போட்டியாளர்களுடன் விவாதிக்கவுள்ளார். இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. Pushpa 2: புஷ்பா படத்தை பார்த்து சாமி ஆடிய ரசிகர்கள்; விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்.. வெற்றிக்கொடியில் புஷ்பா ராஜ்ஜியம்.! 

போட்டியாளர்களின் கேள்வி எழுப்ப ஆயத்தமாகும் விஜய் சேதுபதி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)