ஆகஸ்ட் 26, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லி மாநிலத்தில் உள்ள வடமேற்கு டெல்லி, சாஸ்திரி பார்க் பகுதியில், சாலையோரம் சிலர் உறங்கிக்கொண்டு இருந்தனர். இன்று காலை லாரி ஒன்று அவ்வழியே பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென வாகனம் சாலையோரம் உறங்கியவர்கள் மீது தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், அங்கிருந்து விரைந்து தப்பிசென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நேரில் வந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களில் 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் ஜிடிபி, ஜாக் பர்வேஸ் சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காலை 5 மணிக்கு விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.! 

சாஸ்திரி பார்க் பகுதியில் நடந்த கோர விபத்து:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)