மே 17, நுங்கம்பாக்கம் (Chennai News Today): வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளும் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 16) மதியத்துக்கு மேலாகவும், இரவிலும் பல இடங்களில் திடீர் கனமழை பெய்தது. இந்நிலையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் திடீர் காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்:
TS NOWCAST pic.twitter.com/GwPysjJOVW
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 17, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)