
மே 17, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4 வயதுடைய சிறுவன் பயின்று வருகிறார். சம்பவத்தன்று சிறுவனின் உடல்நிலை திடீரென குன்றியதாக பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த பெற்றோர் சிறுவன் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். College Girl Sexually Harassed: கல்லூரி மாணவிகள் டார்கெட்? மிரட்டல் கல்யாணம், செக்ஸ் டார்ச்சர்.. திமுக பிரமுகர் மீது அதிர்ச்சி புகார்.!
அந்தரங்க உறுப்பில் காயம்:
தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்தபோது, பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் சிறுவனை தாக்கியதால் மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் முதற்கட்டமாக இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்துள்ள காவல்துறையினர் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.