Fact Check Video: அரசுப் பள்ளியில் ஆடல் பாடல்.. வைரலாகும் வீடியோ.., உண்மையில் நடந்தது என்ன..?

தமிழகத்தில் அரசுப் பள்ளி விழாவில் மாணவ-மாணவி கட்டிப்பிடித்து நடனமாடுவதாக வெளியான வீடியோ குறித்த விவரங்களை இதில் பார்ப்போம்.

Fact Check Video: அரசுப் பள்ளியில் ஆடல் பாடல்.. வைரலாகும் வீடியோ..,  உண்மையில் நடந்தது என்ன..?
Fact Check Video (Photo Credit: @tn_factcheck X)

மார்ச் 18, ஆலங்குடி (Pudukkottai News): தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்-மாணவி கட்டிப்பிடித்து நடனமாடும் வீடியோ ஒன்று, ''பெற்றோர்களே உஷார்'' என்று தலைப்பிட்டு வாட்ஸ் அப்பில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அதில், அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் ஆடல் பாடல் நடைபெறவில்லை. தவறான காணாளி பரவி வருகிறது. இது அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி அல்ல. அதில், நடனமாடுபவர்கள் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளும் அல்ல. இந்த வீடியோ, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் குழுவினர், பள்ளிச் சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதனை அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அப்பா அடிப்பாரு, அம்மா திட்டும்" - வீட்டிலிருந்து வெளியேறிய 10 வயது சிறுமி.. தெய்வத்தை திருப்பிக்கொடுத்த இளைஞர்.. குவிந்த பாராட்டு.!

வீடியோ இதோ:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).