
மார்ச் 17, திருவெற்றியூர் (Chennai News): சென்னையில் உள்ள திருவெற்றியூர், 13 வது வார்டு, பத்மநாபா காலனி, இரண்டாவது தெரு பகுதியில் தம்பதிகள் வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு 10 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவத்தன்று உணவு சமைக்க தந்தை இறைச்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அது தெரியாமல் சிறுமி பாலிதீன் கவரை குப்பையில் வீசி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தாய் சௌவர்ணலட்சுமி, தந்தை வந்ததும் உனது செயலை கூறுகிறேன், அவரை சத்தமிட வைக்கிறேன் என கண்டித்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மா எதாவது சொல்லுவார். அப்பா நம்மை அடிப்பார் என பயந்து, வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். பயத்தில் கால்கள் போன போக்கில் புறப்பட்ட சிறுமி, அங்குள்ள மண்டபம் ஒன்றுக்கு சென்று வாசல் பகுதியில் அமர்ந்து இருக்கிறார். அங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியை கவனித்தாலும், உணவு சமைக்க வந்த நபர்களுடன் சிறுமி வந்திருக்கலாம் என எண்ணியுள்ளனர். Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.!
சிறுமி மீட்பு & இளைஞருக்கு பாராட்டு:
பின் சிறுமியை அழைத்து விசாரித்தபோது, அவர் அம்மா திட்டியதால் பயந்து வந்ததாக கூறி இருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை சமாதானம் செய்த நபர், அவருக்கு அரைமணிநேரத்திற்கும் மேலாக ஆறுதல் கூறி வீட்டுக்கு அழைத்து வந்தார். இதனிடையே, மகளை காணவில்லை என பதறிப்போன பெற்றோர், உடனடியாக திருவெற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 3 மணிநேரம் அதிகாரிகள் சிறுமியை பல இடங்களில் தேடி அலைந்து இருக்கின்றனர். இதனிடையே, சிறுமி பத்திரமாக வீட்டுக்கு வந்ததைத்தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞரிடம் நடந்ததை விவரித்து கேட்டனர். பின் சிறுமி ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இளைஞருக்கு கைகளை தட்டி தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், சிறுமிக்கும், அவரின் பெற்றோருக்கும் அதிகாரிகள் சார்பில் அறிவுரையும் வழங்கப்பட்டது.
சிறுமியை மீட்ட இளைஞருக்கு காவல்துறையினர் & பொதுமக்கள் கைதட்டி பாராட்டு:
" எல்லாரும் அவருக்கு கை தட்டுங்கபா.. " - தாய் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமியை பத்திரமாக ஒப்படைத்த இளைஞர்.. பொதுமக்களுடன் சேர்ந்து கைத்தட்டி பாராட்டு தெரிவித்த போலீசார்..#Chennai #Police #youngster #rescue #child pic.twitter.com/7Vd2mdFFh4
— Polimer News (@polimernews) March 17, 2025