டிசம்பர் 27, காளப்பட்டி (Coimbatore News): சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), காதலருடன் தனிமையில் இருந்த 19 வயது கல்லூரி மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தது. இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரில், ஞானசேகரன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் திமுகவை சேர்ந்தவர் என பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில், ஞானசேகரன் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தற்போது நீதிமன்ற காவலில் ஞானசேகரன் வைக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு நீதிகேட்டு பாஜக, அதிமுக, பாமக உட்பட பல்வேறு கட்சிகள் தங்களின் கண்டனம் & போரட்டத்தை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் நேற்று போராட்டமும் நடந்தது. இந்நிலையில், இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமான காரணத்தால், மத்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜகவின் போராட்டமும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை (BJP K Annamalai) பரபரப்பு செயல்:
இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் இருக்கும் தனது வீட்டின் முன்பு, முருகனுக்கு மாலை அணிந்து, பச்சை வேட்டி உடுத்தி வந்த அண்ணாமலை (TN BJP Protest), திமுக அரசுக்கு எதிராக தன்னை சாட்டையால் அடித்துக்கொண்டார். மேலும், இன்று முதல் 28 நாட்கள் விரதம் இருந்து அவர் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்லவுள்ளார். சாட்டையடியைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நமது முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தத்தை தருகிறது. புதிய பொருளாதார கொள்கையை தந்தவர், இன்று நம்முடன் இல்லை. அவருக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர் நமது நாட்டுக்கு வகுத்துக்கொடுத்த பொருளாதார கொள்கையை பின்பற்றுவோம். நாங்கள் இன்று முன்னெடுத்துள்ள போராட்டத்தை, வரும் நாட்களில் தீவிரப்படுத்துவோம். Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
6 முறை சாட்டையடி:
தனிமனிதனுக்கு ஆட்சியாளர் மீது இருக்கும் கோவத்தை காண்பிக்க அல்ல, கண்முன் எதிர்கால தலைமுறை அழிகிறது. கல்வி, பொருளாதார, சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருகிறது. போராக இருந்தாலும் பெண்ணின் மீது கைவைக்க கூடாது என்பது தமிழர்களின் மரபு. இன்று பெண்களின் மீது, அவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் தொடருகிறது. 6 முறை என்னை சாட்டையால் அடித்துக்கொண்டு இருக்கிறேன். முருகனிடம் அதனை வலியுறுத்துவோம். கிடைக்கும் வாய்ப்புகளில் மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம். காவல்துறையில் இருந்து வெளியே வரும்போது, 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் & கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை கண்டறிந்தாலும், எனது மகளை அந்த தாய் கேட்டார். அந்த கேள்வி என்னை இங்கு கொண்டு வந்தது. சாதாரண நிகழ்வை போல பேசி, பின் மீண்டும் செல்வது எனக்கு வருத்தத்தை தருகிறது. தமிழக மக்களுக்கு வேள்வியாக இதனை செய்ய வேண்டும்.
தவறு செய்யும் ஆட்சி அகற்றப்பட வேண்டும்:
பாஜகவினர் மக்களுடன் இருங்கள், அவர்களுக்காக உழைப்போம். ஐயா மன்மோகன் சிங் மறைவையொட்டி, இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பு மதியம் வெளியாகும். நமது மண்ணில் உடலை வருத்தி செய்யும் நிகழ்வுகளுக்கு பலன் இருக்கும். இது சாதாரண நிகழ்வு. முருகனுக்கு 6 சாட்டையடி என்பது, எனக்கு நானே கொடுத்துக்கொண்டது என்பதைவிட, சமுதாயத்தில் நிகழும் குற்றங்களை குறிக்கிறது. தவறு செய்யும் ஆட்சி வெளியேற வேண்டும். நல்ல விஷயங்களை பேச முடியவில்லை. எதற்கெடுத்தாலும் பழிச்சொல் வருகிறது. சென்னை மாநகர ஆணையர் பேசியதில், அது சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையின் நடவடிக்கையால் திருப்தியாக இருப்பதாக கூறுகிறார். Chennai Shocker: 26 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; போதகரின் அதிர்ச்சிதரும் செயல்.. பதறவைக்கும் தகவல்.!
சகோதரியின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டனர்:
கயவனை முதல் முறை குற்றம் செய்தபோதே கைது செய்யப்பட்டு இருந்தால் பெண் திருப்தி அடைந்திருப்பார். காவல்துறை பயன்படுத்தும் வார்த்தை தவறானது. இவ்வுளவு பெரிய விஷயத்தை கடந்துபோன காவல்துறை நினைக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையை எளிதாக பெற இயலாது. அது வெளியே வந்தது சகோதரியின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார்கள். எங்களுக்கும் மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள், அன்று காவல்துறையை சீர்படுத்துவோம். ஆண்டவனுக்கு வேள்வியாக சாட்டையடி கொடுக்கப்பட்டது. அறவழியில் நாம் பயணிக்கிறோம். எங்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். தேர்தல் தோல்வி என்பது பெருமையானது. நேர்மையான வழியில் பணம் கொடுக்காமல் தோல்வி அடைந்திருக்கிறோம். சாராயத்தில் வந்த பணத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவும், மண் இழந்த பெருமையை மீட்டெடுக்கவும் நாங்கள் போராடுகிறோம்.
அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட காணொளி:
#JUSTIN ||திமுக அரசை கண்டித்து சவுக்கால் அடித்துக் கொண்ட அண்ணாமலை | #Annamalai | #Covai | #AnnaUniversity | #CollegeIssue | #PolimerNews pic.twitter.com/w8Ar8M8TLN
— Bjp Natham Social Media Cell (@JpnPillai) December 27, 2024