ஜூன் 02, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் இன்று (ஜூன் 02) இரவு 7:00 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Gold Silver Price: 72,000ஐ கடந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.1120 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!
வானிலை ஆய்வு மைய அறிவிப்பு :
pic.twitter.com/k6qRJb9ysC
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 2, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)