ஜனவரி 23 , புயாங்: சீனாவில் இருக்கும் புயாங் (Fuyang City, China) நகரில் செயல்பட்டு வரும் கேளிக்கை விடுதிக்கு சென்ற மக்கள், ராட்சத ஊசலில் ஏறி சவாரி செய்தனர். அப்போது, அதிக எடையின் காரணமாக திடீரென ராட்சத ஊசல் (Giant Pendulum Ride) தலைகீழாக திரும்பி அப்படியே நின்றது. இதனால் அதில் இருந்த மக்கள் 10 நிமிடம் தலைகீழான நிலையில் இருந்தனர். உயிர் பயத்திலும் அலறினர். சுதாரிப்புடன் செயல்பட்ட அதிகாரிகள், விரைந்து கோளாறை சரி செய்து மக்களை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நமது ஊர் பேச்சுவழக்கில் ராட்சத ஊசலில் பயணித்த மக்களுக்கு மரண பயத்தை காண்பித்துவிட்டனர். Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!
Workers had to clamber up to manually fix the ride and theme park officials said the malfunction was caused by a “weight issue.” pic.twitter.com/Xps63aGY4s
— TRT World (@trtworld) January 20, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)