நவம்பர் 04, டொராண்டோ (World News): கனடாவில் வசித்து வரும் இந்தியர்களுக்கும், காலிஸ்தான் தனிநாடு கேட்டு போராடி வரும் சேக்கியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. கனடாவில் சீக்கிய மக்களின் ஆதிக்கம் அதிகாரத்திலும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள், இந்திய தூதரகம், இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே இந்தியா - கனடா அரசுமுறை உறவில் விரிசல் உண்டாகி இருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் கனடாவில் மேலும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது. இதனிடையே, கனடாவில் உள்ள பிராம்ப்டன் (Brampton Hindu Sabha Temple) இந்து கோவில் ஒன்று காலிஸ்தானிய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. Peanut The Squirrel: இணையத்தை கலக்கிய அணில் கருணைக்கொலை.. குவியும் கண்டனங்கள்.. எலான் மஸ்க் ஆவேசம்.! 

இந்தியர்கள் மற்றும் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)