
ஜூன் 11, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. LKK Vs SMP: டிஎன்பிஎல் 8வது மேட்ச்.. கோவை - மதுரை அணிகள் இன்று மோதல்..!
லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Lyca Kovai Kings Vs Siechem Madurai Panthers):
இந்நிலையில், இன்று (ஜூன் 11) லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (LKK Vs SMP, Match 8) அணிகள் மோதுகின்றன. ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, என்எஸ் சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 6 போட்டியிலும், மதுரை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் என்எஸ் சதுர்வேத் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:
ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ் லோகேஷ்வர், ஜிதேந்திர குமார், பாலசுப்ரமணியம் சச்சின், ஆன்ட்ரே சித்தார்த், பிரதீப் விஷால், மாதவ பிரசாத், எம் சித்தார்த், ராமலிங்கம் ரோஹித், ஜாதவேத் சுப்ரமண்யன், கோவிந்த் ஜி. ENG Vs IND Test Series 2025: இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் 2025; போட்டி அட்டவணை மற்றும் நேரலை விவரம் இதோ..!
சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள்:
என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), ராம் அரவிந்த், அதீக் உர் ரஹ்மான், கணேஷ் எஸ், சி சரத் குமார், பி சரவணன், முருகன் அஷ்வின், எஸ் ராஜலிங்கம், பி விக்னேஷ், குர்ஜப்னீத் சிங், சூர்யா ஆனந்த் எஸ்.