
ஜூன் 11, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் (ENG Vs IND Test 2025) வரும் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸீல் நடைபெறவுள்ளது. SA Vs AUS WTC Final Toss Update: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்தத் தொடருக்கு முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதனால், சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். மறுபுறம், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவான அணியாகவே திகழ்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியா 35 முறையும், இங்கிலாந்து 51 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
போட்டி அட்டவணை:
- முதல் டெஸ்ட் போட்டி - ஜூன் 20-24 - லீட்ஸ்
- 2வது டெஸ்ட் போட்டி - ஜூலை 02-06 - பர்மிங்ஹாம்
- 3வது டெஸ்ட் போட்டி - ஜூலை 10-14 - லார்ட்ஸ்
- 4வது டெஸ்ட் போட்டி - ஜூலை 23-27 - மான்செஸ்டர்
- 5வது டெஸ்ட் போட்டி - ஜூலை 31- ஆகஸ்ட் 04 - ஓவல்
நேரலை விவரம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சோனி (Sony LIV) சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. LKK Vs SMP: டிஎன்பிஎல் 8வது மேட்ச்.. கோவை - மதுரை அணிகள் இன்று மோதல்..!
இங்கிலாந்து அணி வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஹரி புரூக், ஜேக்கப் பேத்தல், ஜோ ரூட், ஒல்லி போப், ஜாக் க்ராலி, கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ஜோஸ் டங், சாம் குக், ஷோயிப் பஷீர்,
இந்திய அணி வீரர்கள்:
சுப்மன் கில் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பந்த், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா. குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.