நவம்பர் 01, கொல்கத்தா (Sports News): ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில் பத்து நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில், 48 ஆட்டங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியானது, நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடராக நடைபெறும் போட்டியில், புள்ளிப்பட்டியல்படி போட்டியை தலைமை ஏற்று நடத்தும் இந்திய அணி தனக்கு எதிரான ஆறு போட்டிகளிலும் அபார வெற்றி அடைந்து, 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு தோல்வியை கண்டு, இரண்டாவது இடத்தில் 10 புள்ளிகளை பெற்று உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களை 8 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. இதில் முதல் நான்கு பட்டியலில் உள்ள அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டிக்கு செல்லும். இதனால் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற முயற்சித்து வருகிறது. Tips for Menstruation Day Pain Relief: மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியால் அவதியா?.. இதை முயற்சித்து பாருங்கள்.. அசத்தல் டிப்ஸ்.!
பாகிஸ்தான் தனது 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல, ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற கடுமையான பலப்பரிட்சை நடத்தி வருகிறது.
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு நவம்பர் 4ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் போட்டி இருக்கிறது. அதேபோல, ஆப்கானிஸ்தானுக்கு நவம்பர் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் போட்டி இருக்கிறது.
பின் பாகிஸ்தானுக்கு 11 நவம்பர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி, ஆப்கானிஸ்தானுக்கு 10 நவம்பர் அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போட்டி இருக்கின்றன. அதேபோல, இலங்கை அணிக்கும் மூன்று போட்டிகள் அடுத்தடுத்து எஞ்சி இருக்கின்றன.
இதனால் அரை இறுதியில் யார் இடம்பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அடுத்தடுத்த போட்டி முடிவுகள் அதனை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் நடப்பாண்டில் சாம்பியனாக இருந்த இங்கிலாந்து அணி, இந்தியாவில் நடைபெற்ற ஆறு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 5 போட்டிகளில் படுதோல்வி அடைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.