Virat Kohli met Mohammed Shami's family (Photo Credit: @babloobhaiya3 X)

மார்ச் 10, துபாய் (Sports News): சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நேற்று (மார்ச் 09) நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முகமது ஷமி (Mohammed Shami) தலைமை தாங்கினார். முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு, கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தான் இந்திய அணிக்கு திரும்பினார். PM Narendra Modi: மகுடம் சூடிய இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு.!

சமி அபாரம்:

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில், அபாரமாக செயல்பட்ட சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில், சமி 3 விக்கெட்டுகளையும் தற்போது இறுதிப் போட்டியில் அதிகம் ரன் விட்டுக் கொடுத்தாலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் முகமது சமி, நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சமியின் தாயின் காலில் விழுந்த விராட் கோலி:

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை இறுதிப்போட்டி பார்ப்பதற்காக சமியின் தாய் துபாய் வந்திருந்தார். முதலில் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது குடும்பத்தினர் வீரர்களுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஷமியின் தாயைப் பார்த்த விராட் கோலி (Virat Kohli Touches Shami's Mother's Feet), திடீரென்று சமியின் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். விராட் கோலியை வாழ்த்திய சமியின் தாய், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீடியோ இதோ: