ICC Champions Trophy 2025 Team India Victory | PM Narendra Modi (Photo Credit: @BCCI / @NarendraModi X)

மார்ச் 09, துபாய் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் (ICC Champions Trophy 2025 Final), இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்த நிலையில், 252 ரன்கள் அடித்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நான்காவது ஐசிசி போட்டித்தொடரை வென்றுள்ளது. தொடர்ந்து 15 முறை கேப்டனாக ரோஹித் சர்மா டாஸ் தோற்றாலும், அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாக வெற்றியை அடைய முக்கிய பங்காற்றினார். IND Vs NZ Highlights: பகையை தீர்த்து மகுடம் சூடிய இந்தியா.. சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றி.. ரோஹித்,  பாண்டியா, ராகுல் அசத்தல்.. ஹைலைட்ஸ் இதோ..! 

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு:

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது வலைப்பக்கத்தில், "அசத்தலான விளையாட்டின் அசத்தல் முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு அழைத்து வந்த எங்களின் கிரிக்கெட் அணியை எண்ணி இந்தியாவே பெருமை கொள்கிறது. அவர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்திய அணிக்கும், அணியின் நாயகர்களுக்கும், அணி குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு: