செப்டம்பர் 29, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. திலக் வர்மா, ரிங்கு சிங் இணை ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் வேகமாக ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, பின் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. சஜிபஷடா பர்ஹான் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 முக்கிய விக்கெட்டுகளை பிடித்து இந்தியாவுக்கு வலுவான நிலையை உருவாக்கினார்.
ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி வெற்றி(Asia Cup 2025 India Vs Pakistan Final 2025):
வெற்றிக்காக 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டை இழந்தது ஏமாற்றத்தை அளித்தது. சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட்டானார். தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சிவம் டியூப் அணியை நிலைநிறுத்தினர். திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு தள்ளினார். இறுதி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் சிவம் விக்கெட் இழந்தது பரபரப்பை கிளப்பியது. கடைசி 5 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் திலக் வர்மா ஒரு 6,4 என அடித்து வெற்றிக்கு வழிவகை செய்தார். இதனால் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. IND Vs PAK Asia Cup 2025 Final: இந்தியா அபார வெற்றி.. ஆசிய கோப்பையுடன் ஹோட்டலுக்கு சென்ற பாக்., அமைச்சர்.. வெறும் கைகளுடன் கொண்டாடிய இந்திய அணி.!
கோப்பை இல்லாமல் இந்தியா அணி வெற்றி கொண்டாட்டம் :
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது வலைப்பக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் விளைவில் ஒன்றுதான் இதுவும். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இந்தப் போட்டியின் வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை பெற மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர் தன்னுடன் ஹோட்டலுக்கு கோப்பையை எடுத்துச் சென்று விட்ட நிலையில், ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் அணி இது தொடர்பாக முறையீடு செய்துள்ளது. விரைவில் இந்த செயலுக்கு தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தால் இந்திய கிரிக்கெட் அணியினர் அதிர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்கள் கோப்பை இருப்பது போல பாவித்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் (Indian Team Trophy Celebration) ஈடுபட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மெஸ்ஸி ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி (Indian Team Trophy Celebration) :
India celebrated enthusiastically without receiving the official trophy, as political drama delayed and ultimately derailed the award ceremony! #AsiaCup pic.twitter.com/XKkglt8ERg
— asif🇮🇳 (@_asif) September 29, 2025
பரிசுத்தொகையை தூக்கியெறிந்த பாகிஸ்தான் கேப்டன் :
ஆசியக்கோப்பை 2025 இறுதி போட்டிக்குப் பிறகு நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா நடந்து கொண்ட விதம் ஏமாற்றத்தை அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினருக்கு வழங்கப்பட்ட ரன்னர்-அப் (Runner Up) பரிசு தொகையை கேப்டன் சல்மான் அலி அகா பெற்றுக் கொண்ட நிலையில், புகைப்படம் எடுத்துக் கொண்ட மறு நொடியே அதனை தூக்கி எறிந்தார். இதன்பின் பேசியவர், இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கும் அவமரியாதை. நாங்கள் எங்களுடைய கடமைகளை சரியாக செய்தோம். கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்தோம். சூரியகுமார் யாதவ் தனிப்பட்ட முறையில் என்னுடன் கைகுலுக்கினார். ஆனால் கேமரா முன் அதை மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பரிசுத்தொகையை தூக்கி எறிந்த வீடியோ :
Breaking News 🚨
कल पाकिस्तान के कप्तान ने जोश जोश में 75,000 डॉलर की चेक फेंक दी थी मगर
अब PCB ने ICC को खत लिखकर कटोरा लेकर वह रकम मांगी है। PCB का कहना है कि
Boys Played Well, What's Happening But मुझे मेरे पैसे वापस कर दो😂😂
— Jaiky Yadav (@JaikyYadav16) September 29, 2025
விருது வாங்காமல் சென்றது தவறான விஷயம் - பாக்., கேப்டன் :
மேலும், "நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. இந்தியா - பாகிஸ்தான் குழந்தைகள் இதை பார்த்தால் அவர்கள் எந்த மனநிலையில் இதனை புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு நாம் ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ACC- க்கு தலைவர் ஒருவர் இருந்தால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்குவதுதான் முறையானது. அந்த தொடருக்கு தலைவரான பாகிஸ்தானை சார்ந்தவரிடம் விருது வாங்காமல் வேறு எப்படி வாங்க முடியும்? இது தவறான விஷயம்" என தெரிவித்தார்.