SL Vs AUS ODI Series 2025 (Photo Credit: @OfficialSLC)

பிப்ரவரி 12, கொழும்பு (Sports News): ஸ்ரீலங்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team) உடன் டி20 மற்றும் ஒருநாள் (SL Vs AUS ODI 2025) போட்டியில் விளையாடுகிறது. 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோப்பை கிடைக்கும் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. CSK Official Jersey: 2025 ஐபிஎல் போட்டிக்கு தயாரான சிஎஸ்கே நிர்வாகம்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய டீசர்ட் வெளியீடு.!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணியினர்:

சரித் அசல்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியில் (Team Srilanka Squad) அவிஷ்கா ஃபெர்ன்டோ, ஜானித் லியானேஜ், நுவனடு ஃபெர்ன்டோ, பாதை நான்சாங்கா, டூனித் வெல்லகா, கமிந்து மெண்டிஸ், வானிந்து ஹசங்கா, குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா, அசிதா பெர்னாண்டோ, ஈஷான் மலிங்கா, ஜெஃப்ரே வாண்டர்ஸே, லெய்ரு குமாரா, மஹீஷ் தெக்ஷனா, முகமது ஷிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Team Australia Squad) அணியில், ஜேக் ஃப்ரேசர்-மெக்ர்க், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, கூப்பர் கோனொல்லி, க்ளென் மேக்ஸ்வெல், மத்தேயு, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்க்லிஸ், ஆடம் ஜம்பா, பென் டார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், சீன் அபோட், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற இலங்கை:

இன்று காலை 10:00 மணி முதல் ஆட்டம் தொடங்கி நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் ஆஸி., கிரிக்கெட் அணி பந்துவீசுகிறது. இன்றைய நாளில் கொழும்பு நகரின் வெப்பநிலை பகலில் 33 டிகிரி செல்சியசும், இரவில் 15 டிகிரி செல்சியசும் என்ற நிலையில் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 5 கிமீ என்ற அளவில் இருக்கும்.

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: