பிப்ரவரி 12, கொழும்பு (Sports News): ஸ்ரீலங்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team) உடன் டி20 மற்றும் ஒருநாள் (SL Vs AUS ODI 2025) போட்டியில் விளையாடுகிறது. 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று முதல் நாள் ஆட்டம் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. SL Vs AUS 1st ODI: வாழ்வா? சாவா? இலங்கை - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி.. டாஸ் என்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி.!
ஆஸ்திரேலிய அணியை பதறவிட்ட இலங்கை:
இலங்கை அணியின் சார்பில் விளையாடிய குஷல் 17 பந்துகளில் 19 ரன்னும், கேப்டன் சரித் 126 பந்துகளில் 127 ரன்னும், துனித் 34 பந்துகளில் 30 ரன்னும் எடுத்து இருந்தனர். 46 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 214 ரன்கள் எடுத்திருந்தார்கள். 215 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடிய முக்கிய வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். மேலும், எந்த ஒரு வீரரும் 50 ரன்கள் கூட எடுக்கவில்லை. இதனால் 33.5 ஓவர் முடிவில் பத்து விக்கெட்டையும் இழந்து ஆஸ்திரேலியா அணியின் 165 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியடைந்தது. ஆஸ்திரேலியாவின் சார்பில் விளையாடிய அலெக்ஸ் 38 பந்துகளில் 41 ரன்னும், ஆரோன் 37 பந்துகளில் 32 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். அனைவரும் சொற்பரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
இலங்கை அணி திரில் வெற்றி:
🦁 ROAR, SRI LANKA! 🇱🇰
What a comeback! Sri Lanka defends 214 in style, bowling out Australia for just 165! A dominant display of skill, passion, and resilience. 💪🏏 #SLvAUS #SriLankaCricket #LionsRoar pic.twitter.com/AsWk3Ax2Gr
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 12, 2025