
பிப்ரவரி 14, கொழும்பு (Cricket News): இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி (Australia Cricket Team), இலங்கை கிரிக்கெட் அணி (Sri Lanka Cricket Team)-யுடன் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி (SL Vs AUS 2nd ODI 2025) ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. இதனால் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது. SL Vs AUS: 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை; ஆஸ்திரேலியாவை கதறவிடும் ஒருநாள் ஆட்டம்.!
நூலிடையில் விக்கெட்டை இழந்த நிஷான் மதுசுகா (Nishan Madushka Wicket Captured by Adam Zamba):
இந்நிலையில், களத்தில் அதிரடியாக விளையாடி வந்த மதுசுகா (Nishan Madushka), தனது 69 வது பந்தில் 51 ரன்களை எடுத்துவிட்டு, 70 வது பந்தில் விக்கெட்டை இழந்தார். 24.4 ஓவரில் பென் டவர்சியஸ் வீசிய பந்தை ஆறு ரன்களாக மாற்றலாம் என நினைத்து அவர் இருந்த வேலையில், பவுண்டரி லையில் இருந்த ஆடம் ஜாம்பா (Adam Zamba), பந்தை இலாவகமாக பிடித்தார். பவுண்டரி லைனை அவர் தாண்டிவிடக்கூடாது என, பந்தை கைகளில் பிடித்து, பின் அதனை தூக்கி மேலே வீசி, நொடியில் மீண்டும் லைனுக்குள் வந்து விக்கெட்டை உறுதி செய்தார். நொடியில் அவரின் செயல்பாடுகள் நடந்து, ஆஸி., அணிக்கு விக்கெட் கிடைத்தது. இதனால் இன்று 300 ரன்களை கடக்க வேண்டிய ஆட்டம், திருப்புமுனையையும் சந்தித்தது.
மதுசுகா விக்கெட் இழந்த காட்சி:
ADAM ZAMPA ON THE ROPE!
Madushka departs following some Zorba brilliance 🤯 #SLvAUS pic.twitter.com/hez6QuzLYh
— 7Cricket (@7Cricket) February 14, 2025