நவம்பர் 25, குயின்ஸ்லாந்து (Sports News): உலகுக்கே கிரிக்கெட்டை அறிமுகம் செய்தது இங்கிலாந்து எனினும், சர்வதேச அளவில் பல சாதனைகளை செய்து கோப்பைகளை தக்கவைத்து அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா எப்போதும் முன்னதாக இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரில் கூட, ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில், இந்தியாவை தோற்கடித்து உலகக்கோப்பையை தனதாக்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைந்துள்ளள காபா மைதானம், ஒலிம்பிக் 2032 போட்டிக்காக தயாராகவுள்ளது. இதற்காக 2025க்கு பின் காபா மைதானம் இடிக்கப்பட்டு, 2030க்குள் நடைபெறும் ஒலிம்பிக் 2032 போட்டிக்காக கட்டும் பணியை அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1895ம் ஆண்டு அமைக்கப்பட்ட காபா மைதானம், 37,000 பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் வசதியை கொண்ட மைதானம் ஆகும். கடந்த 1931ம் ஆண்டு முதல் இம்மைதானம் சர்வதேச போட்டிகளை கண்டுவருகிறது. தற்போதைய நிலையில் கிரிக்கெட் போட்டி மட்டுமே நடத்தப்படும் என்ற சூழல் இருப்பதால், ஒலிம்பிக் போட்டியாகவும் பிரத்தியேக நவீன வசதியுடன் மைதானம் தயாராகவுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள 2.7 ஆஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், கடந்த 1956ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி மெல்போர்ன் நகரிலும், 2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சிட்னி நகரிலும் நடைபெற்றது. 2032ம் ஆண்டு ஒலிம்பிக் பிரிஸ்பேனில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Kantara Chapter1: காந்தாரா தரிசனத்திற்கு தயாராகுங்கள்: காந்தாரா முதல் பாகத்தின் முதற்பார்வை வெளியீடு தேதி அறிவிப்பு.!
இதனால் பிரிஸ்பேன் நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமான காபா, ஒலிம்பிக் போட்டிக்காக தயார்படுத்தப்படவுள்ளது. காபா மைதானம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கோட்டையாக கருதப்படுகிறது. அங்கு நடந்த போட்டிகளில், 1988ம் ஆண்டு வெஸ்டிண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆஸி., தோல்வியை தழுவியது. பிற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிதான்.
இந்தியாவும் அம்மைதானத்தில் நடந்த பல போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்தில், இந்திய அணியில் இடம்பெற்ற தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம், ஆஸி., அணியின் கேப்டன் டிம் காபாவுக்கு வாருங்கள் பார்க்கலாம் என சவாலாக சவுடால் விட்டு இருந்தார்.
விராட் கோலி, பும்ரா, ஷமி, நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் உட்பட இளம் மற்றும் அறிமுகம் வீரர்கள், ரஹானே தலைமையில் அதிரடியாக தங்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி அடைந்தனர். இந்த வெற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கோட்டை என்ற சொல்லை 32 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா உடைத்த பின் பெரிதும் கவனிக்கப்பட்டது.
அன்று அந்நிய மண்ணில் மனதளவில் திடமாக இருந்த இந்திய அணி, ஆஸி., அணியின் மனமமதையை உடைத்து வெற்றி அடைந்தது. அதே பாணியில், வஞ்சம் தீர்த்த ஆஸி., அணி இந்திய மண்ணில் இந்தியாவின் மனமமதையை உடைத்து உலகக்கோப்பை 2023ல் முதல் தோல்வியை பரிசாக தந்து, உலகக்கோப்பையை தனதாக்கியது.