Monkey | Poison (Photo Credit: Pixabay)

நவம்பர் 21, படவுன் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டம், வாசிர்கஞ்ச், பக்ரான் பகுதியை சேர்ந்தவர் குட்டு அலி. இவரின் பக்கத்து வீட்டில் வசித்துவ வருபவர் டெஹ்சீம். குட்டு அலிக்கு அடிப் அலி (வயது 2), ரஹத் அலி (வயது 4) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். டெஹ்ஸீமுக்கு மண்ணட் (வயது 5) என்ற மகள் இருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த குழந்தைகள் அனைவரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்துள்ளனர். அச்சமயம் குரங்கு ஒன்று விஷ பாட்டிலை தூக்கிவந்து வீதியில் போட்டதாக தெரியவருகிறது. இதனைக்கண்ட குழந்தைகள், விஷத்தை குளிர்பானமாக இருக்கலாம் என எண்ணி குடித்துள்ளனர்.

மூவரும் சிறிதளவு விஷத்தை குடித்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். இவர்களை கண்ட பெற்றோர் விசாரித்தபோது உண்மை தெரியவரவே, உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Edge Firefox YouTube Slow: உலகளவில் 5 நொடிகள் ஸ்தம்பித்த யூடியூப் சேவை: கூகுள் தவிர்த்து பிற பிரௌசர் உபயோகித்தவர்கள் ஷாக்.. விபரம் இதோ..! 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பீஸுலி காவல் துறையினரும், மருத்துவமனைக்கு விரைந்து சம்பவம் தொடர்பாக விசாரித்தனர். அப்போது, குரங்கு கொண்டு வந்த பாட்டிலில் இருந்த விஷத்தின் தன்மை தெரியாமல், குளிர்பானம் என நினைத்து குடித்து தெரியவந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை அடிப் அலி பரிதாபமாக உயிரிழந்தார். பிற இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.