ஜூலை 02, ஜகர்தா (Sports News): இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா, யோகியாகர்த்தாவில், ஆசிய அளவில் பேட்மிட்டன் ஜூனியர் (Asia Junior Championship Games) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல பேட்மிட்டன் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில், சீன நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனான ஜாங் ஜிஜிஏ-வும் (Badminton Player Zhang Zhijie) தன்னை போட்டியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
பேட்மிட்டன் களத்திலேயே நடந்த சோகம்:
அவர் நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டின் வீரரரான கசுமா கவானோவை (Kazuma Kawano) களத்தில் எதிர்கொண்டு விளையாடி வந்தார். இருவரும் 11 - 11 என்ற மதிப்பில் சமநிலை பெற்றவாறு ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், போட்டியின்போதே திடீரென மயங்கி சரிந்து களத்திலேயே ஜாங் விழுந்தார். இதனால் பதறிப்போன போட்டியாளர்கள் உடனடியாக மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா எப்போது வெளியாகும்?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பரிதாபமாக பறிபோன உயிர்:
அங்கு சிறுவனுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் துள்ளத்துடிக்க 2 நிமிடத்திற்குள் அவரின் உயிர் ஊசலாடி பிரிந்தது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இந்த விசயத்திற்கு இரங்கலும், வருத்தமும் தெரிவித்துள்ள ஆசிய பேட்மிட்டன் சங்கம் மற்றும் இந்தோனேஷியா பேட்மிட்டன் ஒருங்கிணைப்பு குழு "மிகசிறந்த வீரரை உலகம் இழந்துவிட்டது" என கூறியுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கிய பயணம் நிறைவானது:
17 வயதாகும் ஜாங் கடந்த ஆண்டுதான் சீனாவில் தேசிய அளவிலான வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அதனைத்தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்றுள்ளார். முன்னதாக டச்சு நாட்டில் நடைபெற்ற ஜூனியர் இன்டர்நேஷனல் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றியும் அடைந்தார். ஜாங்-கின் மறைவு பேட்மிட்டன் போட்டியாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
BREAKING: 17-year-old Chinese badminton player Zhang Zhijie has died of cardiac arrest after collapsing on the court during a tournament in Indonesia. pic.twitter.com/X5fg6GJVGH
— Wide Awake Media (@wideawake_media) July 1, 2024