டிசம்பர் 31, டாக்கா (Sports News): வங்கதேச நாட்டில், இந்தியாவின் ஐபிஎல் (IPL 2025) போல, பிபிஎல் (Bangladesh Premier League) ஆட்டம் நடைபெறுகிறது. டி20 முறையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், அந்நாட்டின் பிரதான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். 7 அணிகள் பங்கெடுக்கும் பிபிஎல் ஆட்டம், கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிபிஎல் ஆட்டத்தின் 2024 - 2025 ஆட்டம், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரண்டு ஆட்டத்தில் தர்பார் ராஜேஷாஹி - பார்டியுன் பரிசல் (Durbar Rajshahi vs Fortune Barishal) இடையே நடந்த ஆட்டத்தில் பார்டியுன் அணியும், ரங்க்பூர் ரைடர்ஸ் - தாக்கா கேபிட்டல்ஸ் (Rangpur Riders vs Dhaka Capitals) இடையே நடைபெற்ற ஆட்டத்தில், ரங்க்பூர் அணியும் வெற்றி அடைந்தன. இன்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் - சிட்டகொங் கிங்ஸ் (Khulna Tigers vs Chittagong Kings) அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில் குல்னா அணியும், ரங்க்பூர் ரைடர்ஸ் - சில்ஹெட் ஸ்ட்ரிங்கர்ஸ் (Rangpur Riders vs Sylhet Strikers) இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியும் வெற்றி அடைந்தது. முதல் நான்கு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சிய போட்டிகள் பிப்ரவரி மாதம் 07, 2025 வரையில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. PM Modi’s Journey 2024: அயோத்தி முதல் ரஷ்யா வரை.. 2024ல் பிரதமர் நரேந்திர மோடி கடந்து வந்த பாதைகள்..!
பந்துவீச்சில் ஓஷனே தாமஸ் சொதப்பல்:
இந்நிலையில், இன்று நடந்த பிபிஎல் ஆட்டத்தில் சிட்டகொங் கிங்ஸ் அணியினர் 18.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தனர். தங்களின் இலக்கை அவர்களால் நெருங்க இயலவில்லை. மறுமுனையில், தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய குல்னா டைகர்ஸ் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தனர். இந்த ஆட்டத்தில் குல்னா அணியின் வீரர் ஓஷனே தாமஸ் (Oshane Thomas) பந்துவீச்சின்போது, 1 ஓவரில் மொத்தம் 15 ரன்களை கொடுத்து தொடக்கத்திலேயே அதிர்ச்சி தந்தார். அதாவது, முதல் ஓவரை வீசிய ஓஷனே, வைட், நோ பால் என 12 பந்துகளை வீசி இருந்தார். முதல் ஓவரில் மட்டும் அவர் சொதப்பல் பந்துவீச்சால் 18 ரன்கள் எதிரணிக்கு சேர்ந்தது. குறிப்பாக நோ பால், வைட் கணக்கு காரணமாக, எதிரணிக்கு அவர் ஒரு பந்தில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார். முதல் இரண்டு பந்து நோ பால், இரண்டாவது நோ பாலில் சிக்ஸர், அடுத்ததாக 2 வைடு, பின் ஒரு நோ பால் பவுண்டரி என மொத்தமாக 1 டெலிவரியை ஓஷனே சிறப்பாக முடிப்பதற்குள் 15 ரன்கள் கிடைத்திருந்தது. இதனால் அவர் வங்கதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மோசமான சாதனை படைத்ததாக தெரியவருகிறது. முதலில் பயங்கர சொதப்பல் தந்தாலும், பிற பந்துகளில் சமாளித்து, எஞ்சிய பந்துகளில் அவர் 3 ரன்களை அடிக்கவிட்டிருந்தார்.
ஓஷனே தாமஸ் பந்துவீச்சில் சொதப்பிய காணொளி:
Oshane Thomas conceded 15 runs off 1 ball in BPL.
He bowled 4 no balls in an over.#BPL2025 #Cricketpic.twitter.com/OECUl62Vem
— Abdullah Neaz (@cric___guy) December 31, 2024