IND Vs BAN 1st Test Day 2 (Photo Credit: @CricketNDTV X)

செப்டம்பர் 20, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் (IND Vs BAN 1st Test, Day 2)போட்டி, நேற்று (செப்டம்பர் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. IND Vs BAN Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 339 ரன்கள் குவிப்பு.. அஸ்வின் சதமடித்து அசத்தல்.., ஜடேஜா அபாரம்..!

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜடேஜா (Ravindra Jadeja) - அஸ்வின் (Ravichandran Ashwin) இணை தொடங்கினர். தொடக்கத்திலேயே ஜடேஜா 86 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து முதல் இன்னிங்ஸில் 91.2 ஓவர்களில் 376 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 22 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) மற்றும் சீனியர் வீரரான முஸ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) ஆகியோர் நிதானமாக விளையாடி வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 9 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு: