Sophie Devine - Nigar Sultana Joty ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC X)

அக்டோபர் 10, கவுகாத்தி (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை பத்து போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அக்டோபர் 09-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

வங்கதேசம் எதிர் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் (Bangladesh - New Zealand Women's Cricket Match):

அடுத்ததாக 11வது போட்டியில் வங்கதேசம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (Bangladesh Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 10-ஆம் தேதியான இன்று அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். இன்று நண்பகல் 3 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் வங்கதேச அணி பவுலிங் செய்கிறது. India Vs West Indies: சதம் கடந்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்.. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்.. இந்தியா தெறி சம்பவம்.. சூடுபிடிக்கும் ஆட்டம்.!

வங்கதேசம் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 Bangladesh Vs New Zealand):

போட்டி அணிகள்: வங்கதேசம் W Vs நியூசிலாந்து W (Bangladesh Women's Vs New Zealand Women's Cricket)

நடைபெறும் இடம்: பரஸ்பரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி, அசாம்

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு :