BCCI Head Coach Team (Photo Credit: @BCCI X)

நவம்பர் 29, புதுடெல்லி (Sports News): ஐசிசி உலகக்கோப்பை 2023 (ICC CWC 2023) கிரிக்கெட் தொடரில், இறுதிப்போட்டியில் இந்தியா போராடி தோல்வியை அடைந்தது. இந்திய கிரிக்கெட் அணியை ரோஹித் சர்மா வழிநடத்தினார். அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் பணியாற்றி வந்தார். இவரின் பணிக்காலமும் இம்மாதத்தோடு நிறைவு பெற்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்ட பிசிசிஐ, ராகுல் ட்ராவிட் மற்றும் துணை பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன் வாயிலாக தொடர்ந்து ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படுவார். இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாக, பிசிசிஐ (BCCI) தலைமை ஒருமனதாக அவரை தொடர்ந்த அப்பதவியில் நீடிக்க அனுமதி வழங்கி இருக்கிறது. அதேபோல, என்சிஏ தலைவர், தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷமனின் செயல்பாடுகளுக்கு பிசிசிஐ தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி (Roger Binny, President, BCCI) கூறுகையில், "பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டின் தொலைநோக்கு பார்வை, திறன், தளராத முயற்சி இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய காரணமாகவும், தூணாகவும் இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பில், பயிற்சியாளராக அவர் தொடர்ந்து செயல்பட வேண்டும். அவர் பல சவால்களை ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட்டு இருக்கிறார். அணியின் செயல்பாட்டுக்கு பல உத்வேகங்களை வழங்கும் நபராக இருக்கிறார். அவர் தலைமை பயிற்சியாளராக இந்திய அணிக்கு தொடருவார்" என பேசினார். Shocking Video: வாகன ஓட்டிகளே உஷார்... தலைக்கவசத்தில் புகுந்த நல்லபாம்பு: அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.! 

பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா (Jay Shah, Honorary Secretary, BCCI) கூறுகையில், "ராகுல் டிராவிட்டை விடவும் சிறந்த தலைமை பயிற்சியாளரை நம்மால் பார்க்கவும் முடியாது, அவரைவிட வேறொருவரால் அப்பொறுப்பை ஏற்கவும் முடியாது என்பதை நான் முன்னதாகவே தெரிவித்து இருந்தே. அதனை டிராவிட் மீண்டும் நிரூபணம் செய்துள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய அணிக்காக வலிமையாக செயலாற்றி வருகிறார். உலகக்கோப்பை போட்டியின் போது பல வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்து திறமையாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து தலைமைப்பொறுப்பில் பணியாற்றுவதற்கு தகுதியானவர், பாராட்டுதலுக்குரியவர். தலைமை பயிற்சியாளருக்கு எங்களின் முழு ஆதரவை தெரிவிக்கிறோம்" என கூறினார்.

தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid, Head Coach, Team India) கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியுடன் நான் இருந்த ஒவ்வொரு நாட்களுக்கு மறக்க முடியாதவை. நாங்கள் வெற்றி - தோல்விகளை கண்டுள்ளோம். எங்களின் இந்த பயணம் குழுவுக்கும் தோழமையுடன் தனிசிறப்பு பெற்று இருந்தது. உடைமாற்றும் அறையில் நாங்கள் கடைபிடிக்கும் செயல்முறைகள், வெற்றி-தோல்வி என முடிவு எப்படி இருப்பினும், சிறந்த செயல்முறைகள் தொடரும். என் மீது நம்பிக்கை வைத்து, என்னை ஆதரித்து, தொடர் ஆதரவை வழங்கும் பிசிசிஐ மற்றும் அதன் பணியாளர்களுக்கு எனது மனத்தர்ந்த நன்றிகள். எனது குடும்பத்தின் தியாகம் மற்றும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் பங்களிப்பும் விலைமதிப்பில்லாதது. உலககோப்பைக்கு பின் புதிய சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த முடிவை வழங்க தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம்" என பேசினார்.