Snake on Helmet (Photo Credit: Instagram)

நவம்பர் 29, டெல்லி (Social Viral): இந்தியாவில் 300 வகையான பாம்பு வகைகள் இருப்பதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் விஷமுள்ள மற்றும் விஷமில்லாத பாம்புகளும் இருக்கின்றன. இன்றளவில் நாம் காடு, வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் வீடுகளை அமைத்து வசித்து வருகிறோம்.

இதனால் காட்டுப்பகுதிகளில் மட்டுமே காணப்பட்டு வந்த பல்வேறு பாம்பு வகைகளும், வீதிகளில் சர்வ சாதரணமாக உலாவ தொடங்கிவிட்டன. சிலநேரம் இவை நாம் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவற்றுக்குள்ளும் புகுந்துகொள்ளும். Lwo Jima Island Volcano: ஜப்பானின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது: பரபரப்பை தரும் காட்சிகள் உள்ளே.! 

அதுபோன்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, கேரளாவில் தலைக்கவசம் ஒன்றில் குட்டி நாகப்பாம்பு புகுந்தது நடந்தது. வாகன ஒட்டியும் அது தெரியாமல் தலைக்கவசத்தை அணிந்து வாகனத்தை இயக்கியுள்ளார்.

மண்டையில் எதோ ஊர்வதுபோல தோன்றி, சாலையோரம் தலைக்கவசத்தை கழற்றி கீழே வைத்து பார்த்தபோது அதனுள் குட்டி நாகம் இருந்தது தெரியவந்தது. தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இளம் பருவத்தில் உள்ள நாகம், தலைக்கவசத்தில் இருக்கிறது. Bharat Gaurav Yatra: சென்னையில் இருந்து ஆன்மீக இரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு: விஷமாக மாறிய உணவால் சோகம்.! 

பொதுவாக மழைக்காலங்களில் மழைநீரினால் பாம்புகளின் வாழ்விடங்கள் பறிக்கப்படும்போது, அவை உயரமான இடங்களை நோக்கி பயணிக்கும். தனது வீட்டருகே உள்ள மக்களின் வீடுகளை நோக்கி அவை வரும் சூழலும் உண்டாகும். இதனால் மழை நேரங்களில் மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

 

View this post on Instagram

 

A post shared by Dev Shrestha (@d_shrestha10)