நவம்பர் 02, மும்பை (Cinema News): பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராகவும், சர்வதேச அளவிலும், இந்தியாவில் ஹிந்தி திரையுலகை கடந்தும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை பல காதல் காவியங்களால் வென்றெடுத்த நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan).
வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர் ஷாருக்கான், பாலிவுட்டின் கிங் கான் (King Khan) எனவும் புகழப்படுகிறார். நடிப்பு மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத்தை கொண்டுள்ள ஷாருக்கானின் திரையுலக பயணம் கடந்த 1982ம் ஆண்டு சின்னத்திரை பயணங்களுக்கு பின், 1992ல் தீவானா (Deewana) திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, Dilwale Dulhania Le Jayenge (1995), Dil To Pagal Hai (1997), Kuch Kuch Hota Hai, Chak De! India, Om Shanti Om, Rab Ne Bana Di Jodi, சென்னை எக்ஸ்பிரஸ், ஜவான், பதான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ரெட் சில்லிஸ் எண்டெர்டைன்மெண்ட் (Red Chillies Entertainment) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். Leo Success meet Vijay Speech: ரசிகர்களுக்கு புகழாரம் சூட்டி, பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்; லியோ வெற்றிவிழாவில் ருசிகரம்.!
இந்திய அளவில் நடைபெரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணியின் இணை உரிமையாளராகவும் இருந்து வருகிறார். இவரின் திரையுலக வெற்றி பயணத்தை உறுதி செய்யும் வகையில் 14 பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதையும் இவர் தனதாக்கி இருந்தார். ஹிந்தி திரையுலகை கடந்து, தமிழ் திரையுலகில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதனால் தமிழ் மக்களின் மீது அவருக்கு எப்போதும் பற்று உண்டு.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில், ரசிகர்கள் முன் நேற்று இரவு தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தங்களின் பாசமிகு நடிகரை, அவரின் பிறந்தநாள் அன்று தூரத்தில் இருந்து கண்ட ரசிகர்கள் பலரும் ஆரவாரமெழுப்பி உற்சாகம் அடைந்தனர். நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 58 வது பிறந்தநாள் ஆகும்.
#WATCH | Mumbai: Actor Shah Rukh Khan waves at the fans who gathered outside his residence 'Mannat' in large numbers to catch a glimpse of him, on Shah Rukh Khan's 58th birthday.#ShahRukhKhan pic.twitter.com/gjE99qa0ZX
— ANI (@ANI) November 1, 2023