செப்டம்பர் 11, புது டெல்லி (Sports News): கிரிக்கெட்டில், இன்றைய முன்னணி வீரர்கள் பலருக்கும் மறைந்த கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்-இன் (Lala Amarnath) சாதனை என்றும் மறக்க முடியாததாகவும் உத்வேகத்தை தருவதாகவும் இருக்கும். இவர் பஞ்சாபில் (Punjab) 1911-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் பிறந்தார். கிரிக்கெட் போட்டியின் ஜாம்பவானாக கருதப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அமர்நாத் அறிமுகமானார்.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி மொத்தம் 438 ரன்களை எடுத்து இருந்தது. அதற்குப்பின் இந்திய அணியில் முதலில் பேட்டிங் செய்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மூன்றாவதாக களம் இறங்கிய அமர்நாத் மொத்தம் 118 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தில் மொத்தம் அவர் 21 போர்களை அடித்தார். Chandra Babu Naidu Arrest: சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு: கொந்தளிக்கும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்: ஆந்திராவில் பந்த்.!
இவர் சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவிற்கான முதல் சதத்தை (First Century) அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியா அந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும், அந்த இன்னிங்ஸில் தொடர அமர்நாத்தின் சதம்தான் காரணமாக இருந்தது.
இவர் 2005-ஆம் ஆண்டில் காலமானார். இவரது 112வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரது சாதனையை குறிப்பிட்டிருக்கிறது.