ஜனவரி 13, மும்பை (Sports News): கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் (IPL 2025) கிரிக்கெட் தொடர், இதுவரை 17 சீசன்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த 2025ஆம் ஆண்டு 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணிகளில் இடம்பெறும் வீரர்கள் உறுதி செய்யப்பட்டனர். இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. India Open 2025: தொடங்கப்போகும் இந்தியா ஓபன் பாட்மிண்டன்.. பங்கேற்கப்போகும் இந்திய வீரர்களின் பட்டியல் இதோ.!
ஐபிஎல் தேதி அறிவிப்பு:
இந்நிலையில், நேற்று (ஜனவரி 12) செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார். முன்னதாகவே, இந்த போட்டி மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் பரவின. இந்நிலையில், மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜு சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.