Swapnil Kusale (Photo Credit: @TheKhelIndia X)

ஆகஸ்ட் 01, பாரிஸ் (World News): பிரான்ஸ் (Paris Olympics) நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. கோலாகலமான கொண்டாட்டத்துடன் ஜூலை 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளில், உலகளவில் இருந்து 10500 க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர்கள், 32 பிரிவில் நடைபெறும் விளையாட்டுகளில் கலந்துகொள்கின்றனர். Anshuman Gaekwad: புற்றுநோயால் போராடி உயிரைவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கேக்வாட்.!

50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலம்:

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆட்டத்திலும், கலப்பு ஆட்டத்திலும் மனு பார்க்கர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். இந்நிலையில், 50 மீட்டர் அளவிலான ஆடவருக்கான ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்வப்னில் குஷாலே வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

முதலிடத்தில் சீனா:

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 20 பதக்கங்கள் (10 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) பெற்று முதல் இடத்திலும், பிரான்ஸ் 26 பதக்கங்களை (8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம்) பெற்று இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 15 புத்தகங்களுடன் (8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருக்கிறது.