ஆகஸ்ட் 24, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான் (Shikhar Dhawan), உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு (Retirement)பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இதனை அவர், சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு மூலம் தெரிவித்தார். ஷிகர் தவான், கடைசியாக கடந்த 2022-யில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
ஐசிசி நாயகன்:
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக (Indian Cricket Player) சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஆவார். 38 வயதான அவர், இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக சுமார் 10,867 ரன்கள் எடுத்துள்ளார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அனைவரையும் கவர்ந்தார். மேலும், ஐசிசி தொடர்களில் தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பது இவரது வழக்கமாக கொண்டிருந்தார். இவர், 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சுமார் 6,769 ரன்கள் எடுத்துள்ளார். ENG Vs SL 1st Test Day 2: 2வது நாள் ஆட்ட முடிவு; இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்.. 23 ரன்கள் முன்னிலை..!
உருக்கமான பதிவு:
ஓய்வு குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய மன நிறைவுடன் விடை பெறுகிறேன். பல மறக்க முடியாத நினைவுகளை என்னுள் கொண்டுள்ளேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான் சதம் விளாசிய பிறகு அதனை கொண்டாடுவது தனித்துவமாக இருக்கும். பேட்டை உயர்த்துவதோடு தனது தொடைகளை தட்டி கொண்டாடுவார். சில சமயங்களில் கேட்ச் பிடிக்கும் போதும் இதனை செய்வார். இந்திய கிரிக்கெட்டின் கப்பர் (Gabbar) என்று அழைக்கப்படும் ஷிகர் தவான் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
#WATCH | Indian cricketer Shikhar Dhawan announces retirement from international, and domestic cricket.
He tweets, "As I close this chapter of my cricketing journey, I carry with me countless memories and gratitude. Thank you for the love and support..."
(Source - Shikhar… pic.twitter.com/fGQ9F9mlk0
— ANI (@ANI) August 24, 2024