மார்ச் 04, ஹைதராபாத் (Hyderabad): ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னால் சாம்பியன் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) தங்கள் அணியின் கேப்டன் யார் என்று அறிவித்துள்ளனர். Pakistan PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... இன்று பதவியேற்பு..!
கடந்த சீசனில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் (Aiden Markram) தலைமையில் களமிறங்கிய அந்த அணியானது, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அவர் இரண்டு SAT20 கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை வென்ற கேப்டனான ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸை (Pat Cummins) அந்த அணி ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியை பாட் கம்மின்ஸ் வழிநடத்துவார் என்று அந்த அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் இன்று அறிவித்துள்ளது.