ஜனவரி 04, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1க்கு 1 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது. மேலும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் விளையாடியது. Xiaomi Redmi Watch 4: ரெட்மி வாட்ச் 4 வெளியீடு... அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!
மாஸ் காட்டிய இந்திய அணி: முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆனால் இரண்டாவது டெஸ்டில் மாஸ் காட்டியுள்ளது. நேற்று முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை இந்திய அணி சுருட்டியது. அதன் பின் ஆடிய இந்திய அணி 153 ரன் எடுத்தது. இதைத்தொடர்ந்து , இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன் எடுத்தது. இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை வெறும் 79 ரன் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் தொடங்கியது. இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 என்ற இலக்கை எட்டியது. Iran Bombing: ஈரானை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு.. 103 பேர் பலி..!
இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதேபோல் 31 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி கேப் டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.