ஜூலை 10, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ்-சீகம் மதுரை பாந்தர்ஸ் (RKW Vs SMP) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 193 ரன்களை குவித்தது. Woman was Attacked With an Axe: நிலத்தகராறில் மூத்த சகோதரி கோடாரியால் கொடூரமாக தாக்குதல்; வாலிபர் கைது.. வீடியோ வைரல்..!
திருச்சி அணி தரப்பில் அதிகபட்சமாக வாசீம் அகமது 90 ரன்களும், சஞ்சய் யாதவ் 60 ரன்களும் குவித்தனர். மதுரை அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஹரி நிஷாந்த் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார். ஆனால், மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினர். மேலும், திருச்சி அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
இதன்காரணமாக 16.4 ஓவரிலேயே 126 ரன்கள் மட்டுமே அடித்து மதுரை அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. திருச்சி அணி சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ், ராஜ்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஆட்டநாயகன் விருதை அபாரமாக விளையாடிய வாசீம் அகமது பெற்று சென்றார்.
Shriram capital player of the match to Wasim for his powerful 90 off 55 balls. @TNCACricket @GrandCholasTNPL #TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethu pic.twitter.com/s9CiRUNqqG
— TNPL (@TNPremierLeague) July 10, 2024